Sunday 4 March 2018

எஸ்பிஐ ஏடிஎம்-மில் புதிய பின் நம்பரை உருவாக்குவது எப்படி? | HOW TO GENERATE NEW SBI ATM PIN NUMBER THROUGH ATM | STEP BY STEP

புதிய பின் நம்பரை உருவாக்குவது எப்படி?


How to generate new sbi debit card pin number through atm in tamil


1) எஸ்பிஐ கிளையின் ஏடிஎம்-மில் கார்டை உள்ளீடு செய்ய வேண்டும்.

how to generate new pin number in sbi atm step by step in tamil

2) PIN GENERARION என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

3) அதனை தொடர்ந்து வரும் திரையில் தங்களது 11 இலக்க கணக்கு எண்ணை பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும்.

4) அதனை தொடர்ந்து வங்கியில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணையும் பதிவு செய்து உறுதி செய்ய வேண்டும்.

5) தற்போது ஏடிஎம் திரையில் பின் நம்பர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் பெறப்படும் என தகவல் தெரிவிக்கும். அதனையும் உறுதி செய்ய வேண்டும்.

6) உறுதி செய்யப்பட்ட பிறகு OTP  எனப்படும் கடவுச்சொல் தங்களது பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.

7) இந்த கடவுச்சொல்லை 24மணி நேரத்திற்கு உள்ளாக பயன்படுத்தி புதிய பின் நம்பரை உருவாக்கிக் கொள்ளலாம்.

how to generate new pin number in sbi atm in tamil guide


8) அதற்கு ஏடிஎம்-மில் திரும்பவும் கார்டை உள்ளீடு செய்து BANKING என்பதனை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு அடுத்து வரும் திரையில் மொழியை தேர்வு செய்ய சொல்லும் நீங்கள் அதில் உள்ள ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு அடுத்து வரும் திரையில் ஏதாவது ஒரு இரண்டு இலக்க நம்பரை பதிவு செய்ய சொல்லும் பதிவு செய்து உறுதி செய்தவுடன் அடுத்து வரும் திரையில் பின் நம்பரை பதிவு செய்ய சொல்லும். தொலைபேசியில் பெறப்பட்ட நான்கு இலக்க நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

how to change pin number in sbi atm step by step in tamil

9) அதற்கு அடுத்து வரும் திரையில் PIN CHANGE என்பதனை தேர்வு செய்தவுடன் புதிய பின் நம்பரை பதிவு செய்ய சொல்லும். நீங்கள் விரும்பிய நான்கு இலக்க நம்பரை பதிவு செய்தவுடன் திரும்பவும் அதே நம்பரை பதிவு செய்ய சொல்லும் எனவே திரும்பவும் அதே நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

10) புதிய பின் நம்பரை இருமுறை பதிவு செய்தவுடன் உங்கள் பின் நம்பர் வெற்றிகறமாக மாற்றப்பட்டு விட்டது என காண்பிக்கும்.

11) பின்பு புதிதாக உருவாக்கிய பின் நம்பரை பின்வரும் காலங்களில் ஏடிஎம்-மில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி

No comments:

Post a Comment